ஜூனியர் என்டிஆரின் “தேவரா” படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

‘தேவரா’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ‘தேவரா 2’ படத்தின் அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
ஜூனியர் என்டிஆரின் “தேவரா” படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு
Published on

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் தேவரா பாகம் 1. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பங்களிப்பை செய்தது.

ஜூனியர் என்டிஆரின் 30-வது படமான தேவரா பாகம் 1 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், தேவரா படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தேவரா 2 படத்தின் அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com