ஸ்ரீலீலாவின் 'ஜூனியர்' பட முதல் பாடல்

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
Junior’s first single ‘Let’s Live This Moment’ sounds energetic
Published on

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. தற்போது இவர் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டிலும், தமிழில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ஸ்ரீலீலா , ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் 'ஜூனியர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகனாக கிரீத்தி ரெட்டி நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 18-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் . இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. 'லெட்ஸ் லிவ் திஸ் மூமண்ட்' என்ற இந்த பாடலை ஜஸ்ப்ரீத் ஜாஸ் பாடி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com