வசூலில் மிரட்டும் "ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்"

'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' திரைப்படம் உலகளவில் முதல் நாளே ரூ. 860 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
உலகப்புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றான 'ஜுராசிக் வேர்ல்ட்' திரைப்படம் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டு திரையரங்கில் வெளியானது.
பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமானவர் டேவிட் கோப். இவர் தற்போது 'ஜுராசிக் வேர்ல்ட்' படத்தின் 4-வது பாகமான 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படத்திற்கு கதை எழுதியுள்ளார். காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார்.
யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடித்திருக்கின்றனர். குழந்தைகள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளே ரூ. 860 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 11 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.