முதல் குழந்தையை வரவேற்ற ஜஸ்டின் பீபர் - ஹெய்லி தம்பதி

ஜஸ்டின் பீபர் - ஹெய்லி தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.
Justin Bieber and Hailey couple welcome first child
Published on

சென்னை,

பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் பீபரின் முதல் சிங்கிள் பாடல் 'ஒன் டைம்' கடந்த 2009-ம் ஆண்டு வெளியானது. அப்போது அவருக்கு வயது 15. தொடர்ந்து அடுத்த வருடம் அவரது முதல் ஆல்பம் 'மை வேர்ல்டு' வெளியானது.

இதன் பின்னர் வெளியான அவரது அனைத்து ஆல்பம் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இளம் வயதிலேயே ஜஸ்டின் பீபர் சர்வதேச இசைக் கலைஞராக புகழ் பெற்றார். கடந்த 2018-ம் ஆண்டு ஜஸ்டின் பீபர் தனது நீண்ட நாள் காதலியான மாடல் அழகி ஹெய்லியை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜஸ்டின் பீபர் - ஹெய்லி தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இதனை ஜஸ்டின் பீபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பாத புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அதனுடன், 'வரவேற்கிறோம் ஜாக் புளூஸ் பீபர்' என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் ஜஸ்டின் பீபர் - ஹெய்லி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com