‘100 சதவீதம் காதல்’ படத்தில் முறை மாப்பிள்ளை-முறைப்பெண்ணாக ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே

‘100 சதவீதம் காதல்’ படத்தில், ஜீ.வி.பிரகாஷ்குமார்- ஷாலினி பாண்டே இருவரும் முறைமாப்பிள்ளை-முறைப்பெண்ணாக நடித்து இருக்கிறார்கள்.
‘100 சதவீதம் காதல்’ படத்தில் முறை மாப்பிள்ளை-முறைப்பெண்ணாக ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே
Published on

நாகசைதன்யா-தமன்னா நடித்து, ஆந்திராவில் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் செய்த 100 சதவீதம் லவ் என்ற தெலுங்கு படம் தமிழில், 100 சதவீதம் காதல் என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. இதில், ஜீ.வி.பிரகாஷ்குமார்- ஷாலினி பாண்டே இருவரும் முறைமாப்பிள்ளை-முறைப்பெண்ணாக நடித்து இருக்கிறார்கள். இருவரும் கல்லூரி மாணவர்-மாணவியாக வருகிறார்கள்.

இதில் தாத்தா-பாட்டியாக நாசர்-ஜெயசித்ரா நடித்து இருக்கிறார்கள். அம்மாவாக ரேகா நடித்துள்ளனர். அப்பாவாக தலைவாசல் விஜய் நடித்து இருக்கிறார். அமெரிக் காவில் வாழ்ந்து தாயகம் திரும்பிய மாமா வேடத்தில் தம்பி ராமய்யா நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக ஆர்.வி.உதயகுமார் நடித்து இருக்கிறார். கல்லூரி முதல்வராக மனோபாலா வருகிறார்.

சாம்ஸ், அப்புக்குட்டி ஆகிய இருவரும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்.கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். எம்.எம்.சந்திரமவுலி டைரக்டு செய்திருக்கிறார். சுகுமார், புவனா சந்திரமவுலி ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள இந்த படம், செப்டம்பர் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com