ஜுவாலா கட்டாவை மணக்கிறார் விஷ்ணு விஷாலுக்கு 22-ந்தேதி திருமணம்

பிரபல பேட் மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும், நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் வருகிற 22-ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.
ஜுவாலா கட்டாவை மணக்கிறார் விஷ்ணு விஷாலுக்கு 22-ந்தேதி திருமணம்
Published on

தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் பலே பாண்டியா, ராட்சசன், முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியை 2018-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் விஷ்ணு விஷாலும் பிரபல பேட் மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் காதலிப்பதாகவும் பேசப்பட்டது. ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர். சமீபத்தில் ஜுவாலா கட்டாவை காதலிப்பதை விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தினார். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று திருமண தேதியை அறிவித்தனர். இருவரும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திருமண பத்திரிகையில், நாங்கள் வருகிற 22-ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர்களின் ஆசியோடு நாங்கள் திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இத்தனை வருடமும் எங்கள் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கு நன்றி. நாங்கள் ஒன்றாக தொடங்கும் பயணத்துக்கு உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறோம்'' என்று கூறியுள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com