பெண்மையின் வலிமையைப் பேசும் முற்போக்கான படம் ‘தாய்க்கிழவி’: ஜோதிகா பாராட்டு

‘தாய் கிழவி’படம் சக்திவாய்ந்ததும் புத்திசாலித்தனமானதுமாக மட்டுமல்ல, மிகவும் அழகானதும் கூட என்று நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

பெண்மையின் வலிமையைப் பேசும் முற்போக்கான படம் ‘தாய்க்கிழவி’: ஜோதிகா பாராட்டு
Published on

சென்னை,

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "தாய் கிழவி". மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கும் இப்படமானது வரும் நாளை வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தை சூர்யா, ஜோதிகா உட்பட பல பிரபலங்கள் பார்த்தனர். இந்த படத்தை பாராட்டி தனது இன்ஸ்டாவில் ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:- பெண்மையின் சாரமும் வலிமையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது! மனதை நெகிழ்விக்கும், நன்றாக உணர வைக்கும் திரைப்படம் மட்டுமல்ல, மிக முக்கியமாக முற்போக்கான படம். சிவக்குமார் முருகேசன், இது உண்மையிலேயே உங்கள் முதல் திரைப்படமா? நம் சமூகத்துக்கு நீங்கள் கூறியிருக்கும் செய்தி மிகவும் முக்கியமானது. அதையும் இவ்வளவு கண்ணியமான நகைச்சுவையுடன் எளிமையாக சொல்லியுள்ளீர்கள். உங்கள் கதையை பார்க்கும் போது ஒரு பெண்ணாக எனக்கு பெருமையாக இருந்தது. உங்கள் சிந்தனை முறையே உங்கள் குணநலனைக் காட்டுகிறது. ராதிகா போன்ற வலிமையான திறமைசாலிக்கு அவர் உண்மையாக தகுதியான மேடையை வழங்கியதற்கு சிவகார்த்திகேயனுக்கு நன்றி. வயது என்ற எல்லையை மீறி ஒரு பெண்ணின் தூய திறமையை மையமாகக் கொண்டு படம் எடுத்ததற்காக நடிகைகள் சார்பாக நன்றி.

ராதிகா என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்துகிறார்! இந்த கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த உழைப்பை நினைத்தாலே ஆச்சரியமாக உள்ளது. ‘தாய் கிழவி’ சக்திவாய்ந்ததும் புத்திசாலித்தனமானதுமாக மட்டுமல்ல, மிகவும் அழகானதும் கூட. நாங்கள் திரைக்கு வெளியே அறிந்திருக்கும் ராதிகாவையே அந்தக் கதாபாத்திரத்தில் கண்டோம். உங்கள் உடல் மொழி, ஸ்டைல், அப்பாவித்தனம், குரல் மாற்றம், சிரிப்பு, வசன உச்சரிப்பு இவை அனைத்தும் உங்களை தனித்துவமான நடிகையாக உயர்த்துகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com