'காதல்' பட நடிகர் சுகுமாரன் தலைமறைவு


காதல் பட நடிகர் சுகுமாரன் தலைமறைவு
x

சென்னை மாம்பழம் மகளிர் போலீசார் சுகுமாரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

நடிகர் பரத் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியான 'காதல்' திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமாரன். பல்வேறு படங் ளில் அவர் நடித்துள்ள போதிலும் காதல் சுகுமாரன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். 47 வயதான இவர் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் சுகுமாரன் நெருங்கி பழகியுள்ளார்.

இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சுகுமாரன் மீது துணை நடிகை ஒருவர் மோசடி புகார் அளித்தார். அதில், சுகுமாரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றி விட்டார் என்று கூறியிருந்தார். இந்த புகார் மனு மீது மாம்பலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட இந்த புகார் மீது வடபழனி மகளிர் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து வந்தனர். இதன் காரணமாக போலீஸ் கமிஷனர் அருண் துணை நடிகை அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாம்பழம் மகளிர் போலீசார் சுகுமாரன் மீது நம்பிக்கை மோசடி. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் தன்மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்ததும் சுகுமாரன் தலை மறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதை தொடர்ந்து நடிகர் காதல் சுகுமாரன் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story