உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்தின் காலா ரூ. 50 கோடி வசூல்

உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்தின் காலா ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. #Kaala #Rajinikanth
உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்தின் காலா ரூ. 50 கோடி வசூல்
Published on

சென்னை

உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்தின் காலா ஒரு நேர்த்தியான துவக்கத்தை கண்டு உள்ளது. காலா மிகவும் நேர்த்தியான விமர்சனங்களைப் பெறுவதால், வரவிருக்கும் நாட்களில் அதன் சேகரிப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக ஆய்வாளர்களின் ஆரம்ப மதிப்பீடுகள் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி ரூபாயை ஈட்டியுள்ளன என்று காட்டியுள்ளது.

தயாரிப்பாளர் தரப்பில் கூறும் போது தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி,ஆந்திரா தெலுங்கானா ரூ. 7 கோடி,கேரளாவில் ரூ. 3 கோடி,, மற்றும் இந்தியாவில் ரூ 6 கோடி வெளிநாட்டு நாட்டிலிருந்து ரூ17 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இது உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடியாகும்.இந்த மதிப்பிடப்பட்ட வசூல் மற்றும் இறுதி வசூல் மாறுபடும். என ஐபிடைம்ஸ்( ibtimes ) கூறி உள்ளது.

நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தான் கடைசியாக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த படம் என கூறலாம். தற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் மட்டும் 1.76 கோடி வசூலித்துள்ளது. இது மெர்சல் வசூலான 1.52 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மாண்ட சாதனையை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஒருபுறம் காலா திரைப்படத்தின் வசூல் மிக குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் காலா முதல் நாளில் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல தொடக்கத்தை பெற தவறிவிட்டதாகவே கூறப்படுகிறது. காலா தமிழகத்தில் 650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ,அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது.

விஜய் மெர்சல் தமிழ் நாட்டில் மிக உயர்ந்த முதல் நாள் வசூல் சாதனை படைத்துள்ளது. தொடக்க நாளில் ரூபாய் 24.80 கோடியைத் தொட்டதன் மூலம் கபாலியின் சாதனையை அது முறியடித்தது. அஜித்தின் விவேகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. ரூ.16.50 கோடி ரூபாய்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com