காளி வெங்கட்டின் 'தோனிமா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

காளி வெங்கட் நடித்துள்ள 'தோனிமா' திரைப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காளி வெங்கட்டின் 'தோனிமா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், வைசவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்துள்ள படம், 'தோனிமா'. ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார். இவர் சிகை, பக்ரீத் படங்களை இயக்கியவர். படத்தை சாய் வெங்கடேஷ்வரன் தயாரிக்கிறார். பாக்யராஜ், சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜான்சன் இசை அமைத்துள்ளார்.

தோனிமாவின் இயக்குனர் ஜெகதீசன் சுபு இதற்கு முன்பு சிகை மற்றும் பக்ரீத் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். தோனிமா என்பது கோல்டன் ரெட்ரீவரின் நாய் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் ஜெகதீசன் சுப்பு கூறும்போது, "இது எளிய மக்களின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்ட படம். வீடுகளில் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றும் தனம் என்ற கதாபாத்திரத்தில் ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். கட்டிட வேலை பார்ப்பவராக வரும் காளிவெங்கட், தீவிர கிரிக்கெட் ரசிகர். தனது மகனுக்கும் கிரிக்கெட் வீரரின் பெயரை வைத்திருக்கிறார். இதில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது" என்றார்.

இந்நிலையில் இந்தப் படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com