புதிய மைல்கல்லை எட்டிய ஜெயிலர் படத்தின் 'காவாலா' பாடல்

ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் 'காவாலா' பாடல் யூடியூபில் அதிக பார்வைகளை பெற்றுள்ளது.
Published on

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வருடன் ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஹிட்டடித்துள்ளது. 

இந்த நிலையில் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் யூடியூபில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதாவது, இப்பாடல் இது வரை 250 மில்லியன் (25 கோடி) பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடல் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இது குறித்த பதிவை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com