கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்

கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் தனது மகன் துருவ் உடன் இணைந்து சென்னை காசி திரையரங்கிற்கு சென்று முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தார்.
கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்
Published on

சென்னை

தூங்காவனம் படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருக்கும் படம் கடாரம் கொண்டான். இதில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கமல் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், அவரது இளைய மகள் அக்ஷரா ஹாசனும், நாசரின் மகன் அபி ஹசனும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு, பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். படத்திற்கு இசை ஜிப்ரன். இதனை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது

கடாரம் கொண்டான் இன்று வெளியாகியுள்ளது. இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படத்தின் புரோமோஷனுக்காக விக்ரம் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இப்படத்தின் அதிரடியான சண்டைக் காட்சிகள் மேக்கிங் வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று வெளியான இப்படத்தை பார்ப்பதற்கு விக்ரம் தனது மகன் துருவ் உடன் இணைந்து சென்னை காசி திரையரங்கிற்கு சென்று முதல் நாள் முதல் காட்சி பார்த்து மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com