“காதல் ரீசெட் ரிப்பீட்” படத்தின் டிரெய்லர் வெளியானது

விஜய் இயக்கத்தில் மதுமகேஷ், அர்ஜுன் அசோகன் நடித்துள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் மார்ச் 6ம் தேதி வெளியாகிறது.
“காதல் ரீசெட் ரிப்பீட்” படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

மாலி மான்வி மூவி மேக்கர்ஸ், சன்னி டென்வி தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதல் ரீசெட் ரிபீட்' .

இந்தப் படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜூன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். புதுமையான காதல் கதையை சொல்லும் இந்தப் படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இப்படம் மார்ச் 6ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com