

கதாநாயகர்கள் வில்லன்களாக நடிப்பது போல் நாயகிகளும் வில்லியாக நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு வில்லி வாய்ப்பு வந்துள்ளது.
மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் வில்லியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசுகிறார்கள். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யாராயை அணுகினர். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து காஜல் அகர்வாலை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வாலும் வில்லியாக நடிக்க விரும்புவதாக தொடர்ந்து பேசி வந்தார்.
ராஜமவுலி இயக்கிய மகதீரா படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான காஜல் அகர்வால் மீண்டும் அவரது இயக்கத்தில் வில்லியாக நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியை ராஜமவுலி அணுகினார். அவர் மறுத்ததால் ரம்யா கிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதுபோன்று இப்போது ஐஸ்வர்யாராய் மறுத்த கதாபாத்திரம் காஜல் அகர்வாலுக்கு வந்துள்ளது. இதில் அவர் திறமை காட்டுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.