சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கும் காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு அளவான படங்களிலேயே நடித்து வருகிறார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு அளவான படங்களிலேயே நடித்து வருகிறார்.
இவர் தற்போது 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ள 'கண்ணப்பா' என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளாததால், சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கூறப்படுகிறது. படங்கள் தாண்டி நகைகள் தயாரிப்பு, அழகு சாதனை பொருட்கள் தயாரிப்பு தொழிலும் காஜல் அகர்வால் ஈடுபட்டு வருகிறார். மேலும் விளம்பரங்கள் மூலமாகவும் கல்லா கட்டி வருகிறார்.
இதற்கிடையில் காஜல் அகர்வால் இயக்குனர் அவதாரம் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது பாலிவுட் சினிமாவில் பக்கா கமர்ஷியல் படம் ஒன்றை இயக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் காஜல் அகர்வால் நடிக்க போகிறாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காஜல் அகர்வாலின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.