4 நாட்களில் ரூ. 82 லட்சம் மட்டும் வசூல் செய்த காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’

ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 24ம் தேதி ரிலீஸ் ஆனது.
4 நாட்களில் ரூ. 82 லட்சம் மட்டும் வசூல் செய்த காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’
Published on

மும்பை,

தமிழ், தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக திகழ்பவர் காஜல் அகர்வால். இவர் டி.கே.சேட்டன் இயக்கத்தில் உருவான ’தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு ஜோடியாக முன்னணி நடிகர் ஸ்ரேயாஸ் தல்படே நடித்துள்ளார்.

ரூ. 30 பட்ஜெட்

விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதுதொடர்பான ஊழல்களை வெளிப்படுத்தும் கதைக்களத்தை மையமாக கொண்டு ’தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் உருவாகியுள்ளது. சுமார் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 24ம் தேதி ரிலீஸ் ஆனது.

ரூ. 82 லட்சம் வசூல்

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன இப்படம் வசூலில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதன்படி, இப்படம் கடந்த 4 நாட்களில் ரூ. 82 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் ஆன இப்படம் ரூ. 82 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரூ. 30 கோடி பட்ஜெட்டில் ரிலீஸ் ஆன இப்படம் தற்போதுவரை ரூ. 82 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதால் படக்குழுவினர் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com