விபத்தில் சிக்கினாரா காஜல் அகர்வால்...? - தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன?

நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக இணையத்தில் தகவல் பரவியது.
சென்னை,
நடிகை காஜல் அகர்வால், தான் விபத்தில் சிக்கியதாக இணையத்தில் பரவும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் விபத்தில் சிக்கியதாக சில ஆதாரமற்ற செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அது முற்றிலும் பொய்யானது. கடவுளின் அருளால், நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன், மிகவும் நன்றாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
வதந்திகள் எங்கிருந்து வந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், காஜல் சரியான நேரத்தில் அளித்த விளக்கம் அவரது ரசிகர்களுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
Related Tags :
Next Story






