பாலியல் தொல்லைக்கு எதிராக பேசிய கஜோல்

சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகைகள் எதிர்ப்பு குரல் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர்.
பாலியல் தொல்லைக்கு எதிராக பேசிய கஜோல்
Published on

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் வெளியிடுகிறார்கள். இதனால் செக்ஸ் தொல்லைகள் குறைந்து இருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி2 படங்களில் நடித்துள்ள இந்தி திரையுலகின் முன்னணி நடிகை கஜோல் பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:

பாலியல் தொல்லைகள் சினிமாவில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இருக்கிறது. ஹாலிவுட்டில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேசும் மீ டூ இயக்கம் இந்தி பட உலகில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் வரவேண்டும். பாலியல் தொல்லை குறித்து சிலர் தைரியமாக பேசுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம். சில நடிகைகள் தங்கள் வேலைக்கு பாதிப்பு வரும் என்று இதுபோன்ற தொல்லைகளை பொறுத்துக் கொண்டு இருக்கும் நிலைமை இருக்கிறது. பாலியல் தொல்லைகளை சந்தித்தவர்கள் அதை வெளிப்படுத்த வெட்கப்பட வேண்டியது இல்லை. எனது குழந்தைகளிடம் நான் கண்டிப்பாக இருக்கிறேன். அவர்களிடம் எனது கணவர் அஜய்தேவ்கான் மென்மையாக நடந்து கொள்வார். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சில நேரம் கண்டிப்பாக இருப்பது தேவையானது.

இவ்வாறு கஜோல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com