கஜோலின் கசப்பான அனுபவம்

கஜோலின் கசப்பான அனுபவம்
Published on

'மின்சார கனவு' படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் கஜோல். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் நடித்திருந்தார். இன்றளவும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கஜோல், சமீபத்தில் 'பாப்பரசி' எனப்படும் பின்தொடரும் புகைப்பட கலைஞர்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

தற்போது பாப்பரசி கலாசாரம் பெருகிவிட்டது. ஒரு பிரபலத்தின் வாழ்க்கையில் இது ஒரு பகுதி தான் என்றாலும், எல்லா இடங்களிலும் எங்களை பின்தொடருவது என்பது ஏற்கமுடியாது. ஒருநாள் நான் பாந்த்ரா தாண்டி போகும்போது, எனது காரை கண்டதும் சில புகைப்பட கலைஞர்கள் என்னை பின்தொடர்ந்து வந்தனர். நான் அப்போது சூட்டிங் செல்லவில்லை. நிகழ்ச்சிகளுக்காகவும் செல்லவில்லை. சில தனிப்பட்ட விஷயங்களுக்கு சென்றாலும் கூட, இதுபோன்ற சம்பவங்கள் மனரீதியாக கஷ்டங்களை உணர செய்கின்றன.

நான் ஒரு நடிகை என்றாலும், எனக்கும் சில அசவுகரியங்கள் இருக்கும் என்பதை உணரவேண்டும். இதுகூட பரவாயில்லை. என் மகள் நைசா தேவ்கன் எங்கு சென்றாலும் அவரை ஒரு சிலர் விரட்டி சென்று படம் பிடிக்கிறார்கள். இந்த சமுதாயத்தில் அவளுக்கும் ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கசப்பான அனுபவமாக அமைந்து விடுகின்றன.

மேற்கண்டவாறு கஜோல் வேதனை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com