கலைமாமணி விருது: நடிகர் எஸ்.ஜே.சூர்யா நன்றி

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது: நடிகர் எஸ்.ஜே.சூர்யா நன்றி
Published on

சென்னை,

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது.

கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் என் அன்பும் ஆருயிருமான என் ரசிக பெருமக்களுக்கும், இந்த பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி!! நன்றி!!! கோடான கோடி நன்றி!!!!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com