

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் முறை மாமன், தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய படங்கள் மிகவும் பிரபலம். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் மீண்குழம்பும் மண் பானையும், பூமரம், ஒருபக்க கதை ஆகிய படங்களில் தனது ஆரம்ப காலகட்டங்களில் நடித்தார். பின்னர் சுதா கொங்குரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்த 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி தொடரில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அந்த படத்தில் திருநங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்கள் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘ராயன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அஹ்மது கபிர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்’ படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாகவும் லட்சுமி ஜோதிஷ் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தில் லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா மற்றும் ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கான திரைக்கதையை ஜாபின் ஜான் உடன் இணைந்து அஹ்மது கபிர் எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். அஹ்மது கபிர் ஜூன், மதுரம் படங்களை இயக்கியுள்ளார். கேரள கிரைம் பைல்ஸ் என்ற வெப் தொடரின் முதலிரண்டு சீசன்களையும் அவர் இயக்கியுள்ளார்.
மங்கி பிஸினஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
இந்தப் படம் காதல், நட்பு, குடும்ப உறவுகள் தொடர்பாக உருவாகியுள்ளது. ரொமான்டிக் நகைச்சுவை கலந்த காதல் படமாக இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்’ படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.