'கல்கி 2898 ஏடி 2' : ' கிருஷ்ணராக மகேஷ் பாபு ' - இயக்குனர் நாக் அஸ்வின் தகவல்


Kalki 2898 AD 2: Mahesh Babu as Krishna - director Nag Ashwin
x

கல்கி 2898 ஏடி படத்தின் 2-ம் பாகப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கர்ணனாக நடித்த திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில், அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன், யாஸ்கினாக கமல்ஹாசன், கிருஷ்ணராக கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர்.

இப்படம் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், உலகம் முழுவதும் ரூ,1,100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. தற்போது இதன் 2-ம் பாகப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் பாகத்தில், கிருஷ்ணராக பாலசுப்பிரமணியன் நடித்திருந்தாலும், அவரது முகம் காண்பிக்கப்படவில்லை. இதனால், 2-ம் பாகத்தில் கிருஷ்ணராக மகேஷ் பாபு நடிக்க வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த தகவலுக்கு இயக்குனர் நாக் அஸ்வின் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'கிருஷ்ணர் கதாபாத்திரம் திரையில் அதிக நேரம் தோன்றும் என்றால் அதற்கு மகேஷ் பாபு பொருத்தமாக இருப்பார். அந்த படம் பெரிய அளவில் வசூலும் செய்யும். ஆனால், கல்கி பிரபஞ்சத்தில் கிருஷ்ணரின் முகத்தை காட்ட நான் விரும்பவில்லை' என்றார்.


1 More update

Next Story