பிரபாசின் "புராஜெக்ட் கே" படம் பெயர் மாறியது ; 'கல்கி 2898' முதல் டீசர் வெளியீடு

அறிவியல் புனைகதை படமான 'கல்கி 2898' (புராஜெக்ட் கே) படத்தின் முதல் டீசர் வெளியாகி உள்ளது.படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
பிரபாசின் "புராஜெக்ட் கே" படம் பெயர் மாறியது ; 'கல்கி 2898' முதல் டீசர் வெளியீடு
Published on

ஐதராபாத்

வைஜெயந்தி மூவிஸ் பேனரில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார்.

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, தீபிகா படுகோனே, கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு 'கல்கி 2898' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அறிவியல் புனைகதை படமான 'கல்கி 2898' (புராஜெக்ட் கே) படத்தின் முதல் டீசர் வெளியாகி உள்ளது.படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

நேற்று வெளியான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனேவின் முதல் டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது.அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில்  டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் கமல்ஹாசன், பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் உள்பட  படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இப்படம் ஜனவரி 12, 2024 அன்று சங்கராந்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com