'கல்கி 2898 ஏடி 2 ' படத்தில் கமல்ஹாசன் - அமிதாப்பச்சன் மோதும் காட்சி - நாக் அஸ்வினின் சுவாரஸ்ய பதில்

'கல்கி 2898 ஏடி 2' படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவியது.
'கல்கி 2898 ஏடி 2 ' படத்தில் கமல்ஹாசன் - அமிதாப்பச்சன் மோதும் காட்சி - நாக் அஸ்வினின் சுவாரஸ்ய பதில்
Published on

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வெளியான படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷாபதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இப்படம் இதுவரை ரூ.774 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அமிதாப்புக்கும் கமல்ஹாசனுக்கும் இடையிலான மோதல் காட்சி இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்து இயக்குனர் நாக் அஸ்வின் கூறுகையில்,

'இரண்டாம் பாகத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. புதிய கதாபாத்திரங்கள் இருக்கும், புதிய உலகமும் இருக்கும். அதேபோல் இந்த இரண்டு லெஜண்ட்டுகள் மோதும் காட்சிகளும் இருக்கலாம். ஆனால், அதைப் பற்றி இப்போது பேச முடியாது என்று நினைக்கிறேன். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 25 முதல் 30 நாட்கள் முடிந்திருக்கின்றன. ஆனால், அது 60 சதவிகிதம் கிடையாது. இன்னும் எவ்வளவோ இருக்கிறது,' என்றார்.

முன்னதாக 'கல்கி 2898 ஏடி 2' படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com