கிராபிக்ஸ் காட்சி திருட்டு? - 'கல்கி 2898 ஏடி' படத்திற்கு வந்த சிக்கல்

'கல்கி 2898 ஏடி' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது
கிராபிக்ஸ் காட்சி திருட்டு? - 'கல்கி 2898 ஏடி' படத்திற்கு வந்த சிக்கல்
Published on

சென்னை,

கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் இயக்கும் 'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒரு கிராபிக்ஸ் காட்சி திருடப்பட்டது என்று புகார் கிளம்பி உள்ளது.

அந்த கிராபிக்ஸ் காட்சி தன்னால் 10 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது என்று டிஸ்னி, வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனங்களில் பணியாற்றிய தென்கொரியாவை சேர்ந்த கிராபிக்ஸ் கலைஞர் சங் சோய் குற்றம் சாட்டி உள்ளார்.

தன்னுடைய அனுமதி பெறாமல் அதை 'கல்கி 2898 ஏடி' படக்குழுவினர் பயன்படுத்தி உள்ளதாகவும் சாடி உள்ளார். ஒரு கலைஞனின் படைப்பை காப்பி அடித்துத்தான் இன்னொரு படைப்பை உருவாக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் உருவாக்கிய காட்சியையும், கல்கி ஸ்கிரீன் ஷாட்டையும் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com