கல்யாணி பிரியதர்ஷனின் “லோகா” படத்தின் வசூல் அப்டேட்

கல்யாணி பிரியதர்ஷனின் “லோகா” படம் 4 நாட்களில் ரூ 63 கோடி கோடி வசூலித்துள்ளது
கல்யாணி பிரியதர்ஷனின் “லோகா” படத்தின் வசூல் அப்டேட்
Published on

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் லோகா படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 28 ம் தேதி வெளியானது.இப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் லோகா எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. திரைப்படம் தமிழில் இன்று வெளியானது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ் நாட்டில் வெளியிடுகிறது.

இந்நிலையில், கல்யாணி பிரியதர்ஷனின் லோகா படம் 4 நாட்களில் ரூ 63 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com