உடல்நிலை வதந்தியால் கல்யாணி வருத்தம்...!

கல்யாணி உடல் நிலை குறித்து இணைய தளங்களில் வதந்தி பரவியது
உடல்நிலை வதந்தியால் கல்யாணி வருத்தம்...!
Published on

ஜெயம், ரமணா, மறந்தேன் மெய் மறந்தேன், இன்பா, கத்திக்கப்பல், பருந்து, இளம்புயல் போன்ற படங்களில் நடித்துள்ள கல்யாணி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 2013-ல் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு கல்யாணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடக்க முடியாமல் இருக்கும் தன்னை செவிலியர்கள் கைத்தாங்கலாக அழைத்து செல்லும் வீடியோவை வெளியிட்டார். தனக்கு இரண்டாவது முறையாக முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கல்யாணி உடல் நிலை குறித்து இணைய தளங்களில் வதந்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து கல்யாணி வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில் "எனது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் இறந்த யாரோ ஒருவரின் உடம்பில் எனது முகத்தை மார்பிங் செய்து ஒட்டி உள்ளனர்.

உடல்நிலை சரியில்லாதபோது சந்தித்த பிரச்சினைகள் குறித்து பேசினேன். ஆனால் எனது உடல் நிலை குறித்து தவறான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்'' என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com