குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடிய கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படங்கள்...!

கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடிய கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படங்கள்...!
Published on

சென்னை,

உலகம் முழுவதும் இன்று 2024ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நள்ளிரவு முதலே மக்கள் இனிப்பு மற்றும் கேக்குகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை நடிகை சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசன், இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாசினியுடன் புத்தாண்டை கொண்டாடும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களுடன் நடிகை சுருதிஹாசனின் காதலன் சாந்தனுவும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை சுருதிஹாசன் பகிர்ந்த புகைப்படங்கள்
நடிகை சுருதிஹாசன் பகிர்ந்த புகைப்படங்கள்

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு ''தக் லைப்' என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com