கமலின் 2 படங்கள் ஒரே மாதத்தில் - ரசிகர்கள் கொண்டாட்டம்

கமல்ஹாசன் நடித்த `இந்தியன் 2,' 'கல்கி 2898 ஏடி' ஆகிய இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கமலின் 2 படங்கள் ஒரே மாதத்தில் - ரசிகர்கள் கொண்டாட்டம்
Published on

சென்னை,

கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் கடந்த 2022-ல் வெளியானது. அதன்பிறகு இரண்டு வருடங்களாக அவரது நடிப்பில் படங்கள் எதுவும் வரவில்லை.

இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் கமல்ஹாசன் நடித்த `இந்தியன் 2,' 'கல்கி 2898 ஏடி' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன.

இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல்பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமலின் தோற்றங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

`கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசுடன் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஜூன் மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் திரைக்கு வருவது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. கமல்ஹாசன் தற்போது 'தக்லைப்' படத்தில் நடித்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com