'தீபிகா படுகோனின் குழந்தை இந்த தொழிலைத்தான் தேர்ந்தெடுக்கும்' - கமல்ஹாசன்

மும்பையில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் படக்குழு புரொமோசன் பணியில் ஈடுபட்டது.
Kamal Haasan predicts Deepika Padukone's baby will choose this career
Published on

மும்பை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் தீபிகா படுகோன் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கிறார். மேலும், கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.

கதாநாயகன் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரும் வாகனமுமான "புஜ்ஜி" அறிமுகம் ஆனது.

சமீபத்தில், இப்படத்தின் இரண்டு டிரெய்லர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின. சில தினங்களுக்கு முன்பு மும்பையில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் படக்குழு புரொமோசன் பணியில் ஈடுபட்டது.

அதில், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நடிகர் கமல்ஹாசன் தீபிகா படுகோனிடம் உங்கள் குழந்தையும் ஒரு நாள் படம் எடுக்கும் என கூறினார். முன்னணி நடிகரின் இந்த நகைச்சுவையான பேச்சு தீபிகா உள்பட அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. 'கல்கி 2898 ஏடி', வரும் 27-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com