கனடா மேடையில் கமல்ஹாசனுக்கு 'கோல்டன் பீவர் விருது'!


கனடா மேடையில் கமல்ஹாசனுக்கு கோல்டன் பீவர் விருது!
x

இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் கனடாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

திரையுலகில் கமல்ஹாசன் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில், 'கோல்டன் பீவர் அவார்ட்' (Golden Beaver Award) என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் கனடாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பல விருதுகளைக் குவித்துள்ள கமல்ஹாசன், 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார். வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, சமூகம் சார்ந்த விழிப்புணர்வையும், ஆழமான கருத்துகளையும் தாங்கி நிற்பதால், அவர் ஒரு சினிமாவில் தனித்துவமான கலைஞராக கமல்ஹாசன் திகழும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

1 More update

Next Story