ஜி.வி.பிரகாஷ் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்..!

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிடுகிறார்.
ஜி.வி.பிரகாஷ் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்..!
Published on

சென்னை,

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்து உள்ளது. ஜி.வி.பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com