மீண்டும் இணையும் கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் கூட்டணி

‘அமரன்’ பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்க உள்ளார்.
மீண்டும் இணையும் கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் கூட்டணி
Published on

கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளது.

கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘டான்’ பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுத்து ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தைராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘அமரன்’ பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com