பிக்பாஸ் குழுவினருக்கு விருந்தளித்த கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படங்கள்...!

கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் குழுவினருக்கு விருந்தளித்த கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படங்கள்...!
Published on

சென்னை,

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. மேலும் 7வது சீசன் கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்தது. இதில் யாரும் எதிர்பாராவிதமாக வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த சின்னத்திரை நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் தொகுப்பாளர் கமலின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த சீசனில் போட்டியாளரான நடிகை மாயா, கமலுடன் விக்ரம் படத்தில் நடித்துள்ளதால் அவருக்கு ஆதரவாக கமல் செயல்படுகிறார் என்று பலரும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் குழுவினருக்கு விருந்தளித்துள்ளார். பிக்பாஸ் செட் அமைக்கப்பட்ட ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த மதிய உணவு விருந்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருந்தில் பெரி பெரி சிக்கன், மட்டன் சுக்கா, இறால் தொக்கு, கடாய் சிக்கன் குழம்பு, கீரனூர் மட்டன் உள்ளிட்ட 43 வகையான உணவுகள் பரிமாறப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com