நடிகர் சிவகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்


நடிகர் சிவகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்
x

நடிகர் சிவகுமார் இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகுமார் இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். 1967-ல் வெளியான கந்தன் கருணை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், தங்கத்திலே வைரம், மேல்நாட்டு மருமகள் என பல படங்களில் நடிகர் சிவகுமார் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கடைசியாக, 2001-ல் வெளியான அஜித், ஜோதிகாவின் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, சித்தி, அண்ணாமலை என தொலைகாட்சித் தொடர்களில் நடித்தார். நடிப்பை நிறுத்திவிட்ட சிவகுமார், கம்பராமாயணம், திருக்குறள் என சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிவகுமாருக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகுமாரண்ணே, 84 மார்க் போதாது... நூறுதான் நல்ல மார்க்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story