கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் 25ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

'இந்தியன் 2' படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் 25ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
Published on

சென்னை,

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த நிலையில், 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com