சாருஹாசனுடனான புகைப்படத்தை பகிர்ந்த கமல்

கமலின் அண்ணன் சாருஹாசன். தளபதி, விக்ரம், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சாருஹாசனுடனான புகைப்படத்தை பகிர்ந்த கமல்
Published on

சென்னை,

நடிகர் கமல்ஹாசனின் மூத்த அண்ணன் சாருஹாசன்(வயது 95). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். மகேந்திரன் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான 'உதிரிப்பூக்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சாருஹாசன். தளபதி, விக்ரம், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாருஹாசன் வயது மூப்பு காரணமாக தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

நடிகர் கமல் மாநிலங்களவை உறுப்பினரான பின் அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையே, தன் 234-வது திரைப்படத்தின் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார். இப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில், கமல் தனது மூத்த அண்ணன் சாருஹாசன் மற்றும் அண்ணி புகைப்படத்தைப் பகிர்ந்து, 2 புன்னகை மன்னர்கள் + மன்னி என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com