"வீர தீர சூரன் 2" இயக்குனரின் படத்தை தயாரிக்கும் கமல்?

இயக்குநர் சு. அருண் குமார் கமல் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"வீர தீர சூரன் 2" இயக்குனரின் படத்தை தயாரிக்கும் கமல்?
Published on

சென்னை,

'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் 2' படத்தில் நடித்தார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் எஸ்.யு அருண்குமார் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நாயகன் யாரென்று பேச்சு வார்த்தை நடப்பது போன்ற செய்திகள் பரவி வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com