ரசிகர் மன்றங்களை நற்பணிமன்றமாக மாற்றிய கமல்தான் எனக்கு வழிகாட்டி - சூர்யா

என்னுடைய இலக்கை நான் தொடுவதற்கு கமல்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார் என்று சூர்யா கூறியுள்ளார்.
ரசிகர் மன்றங்களை நற்பணிமன்றமாக மாற்றிய கமல்தான் எனக்கு வழிகாட்டி - சூர்யா
Published on

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சூர்யா, "நான் அகரம் ஆரம்பிக்கும் போது 35 வயது இருக்கும். ஆனால், நீங்க 20, 22 வயசுல சமுதாயத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டீர்கள். இப்போது அகரத்தை அகரம் முன்னாள் மாணவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். படித்ததையும் பெற்றதையும் பல மடங்காக திரும்ப கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அகரம் உருவாகுவதற்கு ஏகப்பட்ட வழிகாட்டிகள் இருக்கிறார்கள். கமல் முக்கியமான வழிகாட்டி இருக்கிறார். ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக மாற்றியது அவர்தான். நான் வேற தொழிலில் இருந்திருந்தாலும் என்னுடைய இலக்கை நான் தொடுவதற்கு அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பார். அவர் சொன்ன மாதிரி, `அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகத்தில் ஏராளம்'. நினைக்கின்ற கனவு நிச்சயம் நிறைவேறும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com