சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்

திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என சிவகார்த்திகேயனை கமல் வாழ்த்தியுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்
Published on

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கியவர் சிவகார்த்திகேயன். அங்கிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தனுஷ் நடித்த ‘3’ படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். பின்னர் ‘எதிர்நீச்சல்’ படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், வேலைக்காரன், டான், டாக்டர்’ போன்ற வெற்றி படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ படமும், சுதா கொங்கரா இயக்கிய‘பராசக்தி’ படமும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கமல்ஹாசன், “என் அன்புத் தம்பி சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.” என வாழ்த்தியுள்ளார். ‘சேயோன்’ திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com