

சென்னை
பிப்ரவரி 21ந்தேதி புதிய கட்சி தொடங்கும் கமல்ஹாசன், 23ந்தேதி வரை முதல் கட்டமாக சுற்றுப் பயணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது தனது அரசியல் பயணத்திற்கு நாளை நமதே என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய பிரதேசமாக மாற்றுவதே நாளை நமதே. அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம். கிராமங்களை தத்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கிராமங்களை தத்தெடுப்பது குறித்து பேச உள்ளேன். கிராமங்களுக்கு உதவும் எண்ணம் அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#KamalHaasan | #NaalaiNamadhae | #PoliticalEntry | #TNPolitics