

இதில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இருவரும் வில்லன் வேடம் ஏற்று இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராமும் நடிக்கிறார். இவர் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பாவக்கதைகள் படத்தில் திருநங்கையாக நடித்து இருந்தார். விக்ரம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னை மற்றும் காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினர். தற்போது புதுச்சேரியில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் விக்ரம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு உள்ளதாக புதிய தகவல் இணையதளங்களில் பரவி வருகிறது.
முதல் பாகம் வெளியானதும், இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இரண்டாம் பாகத்திலும் கமல்ஹாசனே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்து உள்ளார். அதுபோல் விக்ரம் படப்பிடிப்பை முடித்ததும், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழு தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.