பொள்ளாச்சியில் நடைபெறும் 'காஞ்சனா 4' படப்பிடிப்பு பணி


பொள்ளாச்சியில் நடைபெறும் காஞ்சனா 4 படப்பிடிப்பு பணி
x

'காஞ்சனா 4' படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பொள்ளாச்சி,

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர் - காமெடி ஜானரில் உருவான இந்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனை தொடர்ந்து ராகவேந்திரா புரடக்சன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா 4' உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 23-ம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தை, ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story