50வது நாளை நிறைவு செய்த “காந்தாரா சாப்டர் 1”

ரிஷப் ஷெட்டி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.
Published on

கன்னட திரைப்படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

காந்தாரா சாப்டர் 1 படம் 5 வாரத்தில் ரூ. 883 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வரும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் கடந்த 31ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50-வது நாளை இன்று நிறைவு செய்துள்ளதாக படக்குழு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com