இந்திய சினிமா இதுவரை கண்டிராத படம் "காந்தாரா சாப்டர் 1"- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா

பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான "காந்தாரா சாப்டர் 1" படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
இந்திய சினிமா இதுவரை கண்டிராத படம் "காந்தாரா சாப்டர் 1"- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா
Published on

கன்னட திரைப்படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர் 1' படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், 'ஸ்பிரிட்' பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா "காந்தாரா சாப்டர் 1" படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "காந்தாரா சாப்டர் 1 உண்மையான மாஸ்டர்பீஸ். இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று. சினிமாட்டிக் உடன் கூடிய இடி மின்னல் மழை, கரடுமுரடான, தெய்வீகம் மற்றும் அசைக்கமுடியாதது. ரிஷப் ஷெட்டி தனியாளாக உருவாக்கி படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார். பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் அஜ்னீஷ்க்கு சிறப்பு பாராட்டுகள்" எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com