ரிலீசுக்கு முன்பே லாபத்தை அள்ளி வரும் "காந்தாரா சாப்டர் 1"

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள “காந்தாரா சாப்டர் 1” படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரிலீசுக்கு முன்பே லாபத்தை அள்ளி வரும் "காந்தாரா சாப்டர் 1"
Published on

சென்னை,

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர் 1' என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது.

இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 படம் ரிலீசுக்கு முன்பே லாபத்தை அள்ளி வருகிறது. அதாவது, ரூ.125 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜி நெட்வொர்க் ரூ.80 கோடிக்கு வாங்கி உள்ளது. அதேபோல் தமிழ்நாடு தியேட்டர் உரிமை ரூ.35 கோடிக்கும், தெலுங்கு தியேட்டர் உரிமை 95 கோடிக்கும் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தின் ஒடிடி உரிமை ரூ.125 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com