இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த "காந்தாரா சாப்டர் 1" டிரெய்லர்


இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர்
x
தினத்தந்தி 24 Sept 2025 10:01 AM IST (Updated: 27 Sept 2025 9:47 AM IST)
t-max-icont-min-icon

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள “காந்தாரா சாப்டர் 1” படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர் 1' என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந் நிலையில், நேற்று முன்தினம் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் சுமார் 55 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் பார்வைகளை கடந்து வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது,24 மணி நேரத்தில் இந்திய அளவில் இன்ஸ்டாகிராமில் அதிக ஷேர் செய்யப்பட டிரெய்லர் என்ற புதிய சாதனையை இப்படத்தின் டிரெய்லர் படைத்துள்ளது. இந்த டிரெய்லர் 1.2 மில்லியன் ஷேர் செய்யப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

1 More update

Next Story