திருட்டு கதை புகாரில் சிக்கிய கங்கனா

தமிழில் தாம்தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான தலைவி படத்தில் நடித்துள்ளார்.
திருட்டு கதை புகாரில் சிக்கிய கங்கனா
Published on

தமிழில் தாம்தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான தலைவி படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்தநிலையில் கங்கனா ரணாவத் தற்போது திருட்டு கதை புகாரில் சிக்கியுள்ளார். கங்கனா சமீபத்தில் காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டாவின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து இருந்தார். இதற்கு எழுத்தாளர் ஆஷிக் கவுல் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறும்போது, நான் காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டா என்ற புத்தகத்தை எழுதி உள்ளேன். அதை படமாக்குவதற்காக கங்கனாவை பல தடவை அணுகினேன். கதையின் சில பகுதிகளை அவருக்கு மின் அஞ்சலிலும் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் இந்த கதையை திருடி சினிமாவாக தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது'' என்றார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மும்பை கார் போலீசார் கங்கனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com