ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெறும் கங்கனா

ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெறும் கங்கனா
Published on

தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கங்கனா ரணாவத், தலைவி படத்தில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது லாரன்சுடன் சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா, அளித்த பேட்டியில், 'இந்தி திரையுலகில் எனக்கு சிலருடன் பிரச்சினை இருந்தன. இதனால் படங்களில் நடிக்க விடாமல் ஓரம்கட்டினர். அங்கு நடந்த அரசியல் விளையாட்டு பிடிக்காமல் இந்தி சினிமாவில் இருந்து விலகி ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது கதாநாயகனுக்கு இணையான சம்பளம் பெறுகிறேன்'' என்றார்.

இந்த நிலையில் கங்கனா அளித்துள்ள பேட்டியில், "இந்தி டைரக்டர் கரண் ஜோகரால்தான் பிரியங்கா சோப்ரா இந்தி திரையுலகை விட்டு வெளியேறினார். கதாநாயகனுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று முதன் முதல் பேசிய நடிகை நான்தான். இதற்காக பல பிரச்சினைகளை எதிர்கொண்டேன். நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரங்களில் வேறு நடிகையை நடிக்க வைத்தார்கள். அந்த கதாபாத்திரங்களில் சம்பளம் வாங்காமல் இலவசமாக நடித்து கொடுக்கவும் நடிகைகள் முன் வந்தனர். போராட்டங்களுக்குப் பிறகு இப்போது நானும் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் பெறுகிறேன்" என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com