மலையாள நடிகைக்கு நடந்தது போல தான் தனக்கும் நடந்தது கங்கானா ரனாவத்

மலையாள நடிகைக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் போல் தான் தனக்கும் நடந்தது என நடிகை கங்கானா ரனாவத் கூறினார்
மலையாள நடிகைக்கு நடந்தது போல தான் தனக்கும் நடந்தது கங்கானா ரனாவத்
Published on

டிசம்பர் 2000-ம் ஆண்டில் ஹிருத்திக் ரோஷனும் சுசன்னேவும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. பிறகு கருத்துவேறுபாடு காரணமாக 2013ல் பிரிந்தார்கள். மே 2014ல் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். அடுத்தச் சில மாதங்களில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. கங்கனா ரனாவத்துடன் காதலில் இருந்ததால்தான் இந்த மணமுறிவு ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இருவரும் கைட்ஸ், கிரிஸ் 3 என இரு படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.

இதற்குப் பிறகு ஹிருத்திக் - கங்கனா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிய நேர்ந்தது. அதற்கு பிறகுதான் இருவரும் மாறி மாறி பத்த்ரிகைக்கு பேட்டி அளிப்பது. வக்கீல் நோட்டீஸ் விடுவதும் ஆரம்பமாகி உள்ளது காதல் விவகாரம் தொடர்பாக ஹிருத்திக்கும் - கங்கனாவும் மோதிக்கொள்வது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தனியார் டிவிக்கு பேட்டி அளித்த நடிகை கங்கானா ரனாவத் கூறியதாவது:-

பிப்ரவரி 17 மலையாள நடிகை பாலியல் தாக்குதலை மேற்கோளிட்டு, திரைப்படத் தொழில் எவ்வளவு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் பெரிய இடம் என பலர் சினமா துறையில் ஹிர்திக்ரேசன் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க கோரினர். அவர பயந்திருந்தாலும் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதாக அகூறினார்.

மேலும் அவர கூறியதாவது:-

உங்களை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் உள்ளன. மலையாள நடிகைக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். அவர்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இது போன்றது தான் எனது விவகாரமும்.ஆனால் நான் மிகவும் பயந்து விட்டேன்.

அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பதை பார்க்க வேண்டும். கங்கனா இன்னும் ஹிர்திக்குடன் நேருக்கு நேர் சந்திக்க காத்திருக்கிறார். அந்த நேரத்தில் நான் அமைதியாக இருந்தேன் ஏனெனில் நான் அவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைப் பார்க்க விரும்பினேன். என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com